காட்டு யானை தாக்கி வேன் சாரதி பலி!

ஹயஸ் வேன் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பொலனறுவை, கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வேனே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவை, பலுகஸ்தமன – சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வேனின்  சாரதியே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை ஒன்று வீதியைகே கடக்க முற்பட்டபோது அவ்வழியாகப் பயணித்த ஹயஸ் வான் ஒன்று காட்டு யானை மீது மோதியுள்ளது.

பின்னர், இந்தகே காட்டு யானையானது அந்த வேனைத்  தாக்கியுள்ள நிலையில் வானானது அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது, வேனில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார் என்றும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவுக்குக் சென்ற சிலரை வீட்டில் இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்த வேனே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

Related Articles

Latest Articles