ஜே.வி.பியின் ஸ்தாபகரான ரோஹண விஜேவீரவின் மகனான உவிந்து விஜேவீர, எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
இரண்டாம் தலைமுறை எனும் அமைப்பின் தலைவரான இவர், குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, பொதுத்தேர்தலில் மௌபிம ஜனதாக் கட்சியில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் கிரியல்லவின் மகள், கண்டி மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார். லக்ஷ்மன் கிரியல்ல இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.










