ராஜபக்சக்களின் அரசியல் பயணம் இத்தேர்தலுடன் முடிவடையக்கூடும். சிலவேளை தேசியப் பட்டியல் ஊடாக நாமல் ராஜபக்ச மட்டுமே நாடாளுமன்றம் தெரிவாகக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ராஜபக்சக்கள் செய்த தவறுகளால்தான் அரசியலில் இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தெரிந்ததால்தான் அவ்வணியில் இருந்து நான் முன்கூட்டியே வெளியேறி, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு பாடுபட்டேன். ஆனால் மைத்திரியும் தவறிழைத்துவிட்டார்.
இம்முறை தேர்தலில் ராஜபக்சக்கள் போட்டியிடமாட்டார்கள். அவ்வாறு போட்டியிட்டால்கூட மக்கள் நிராகரிப்பார்கள். சிலவேளை நாமல் ராஜபக்ச மாத்திரம் தொங்கி நாடாளுமன்றம் தெரிவாகக்கூடும்.
அதேவேளை பொதுத்தேர்தலை ஊடாக ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய முயற்சி சஜித் பிரேமதாசவிடம் இல்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மட்டுமே குறிவைத்து செயற்பட்டுவருகின்றார்.” – என்றார்.










