பொதுத்தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
தேர்தலில் இருந்து தான் ஒதுங்குவதாகவும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் இன்று அறிவித்துள்ளார்.
தனக்கு தெரியாமல் பிரிதொரு நபருக்கு தொகுதி அமைப்பாளர் பதவியை சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










