“ ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்காக பெரும்பாடுபட்டு பிரசாரங்களில் ஈடுபட்டேன். ஆனால் பொதுத்தேர்தலில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கட்சி தலைவர் நீதியை பெற்றுத்தர வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் நடிகை தமிதா அபேரத்ன.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் தான் களமிறங்கவிருப்பதாக தமிதா அறிவித்திருந்தார்.
வேட்புமனுவில் நேற்று காலை கையொப்பமிட வந்திருந்தவேளையிலேயே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடைசி நேரத்தில் வேட்பு மனுவில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு
“ ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் ஹேஷா விதாகனே விடுத்த கோரிக்கையின் பிரகாரம்தான் நான் இரத்தினபுரி மாவட்டத்தை தெரிவுசெய்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவரே மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளார்.
எனது உரிமை மீறப்பட்டுள்ளது. அனைத்து குரல் பதிவு ஆதாரங்களும் உள்ளன. நான் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.
கட்சி தலைவர் சஜித் பிரேமதாசமீது நம்பிக்கை உள்ளது. அவர் நீதியை பெற்றுத்தர வேண்டும்.” – என்றார்.










