நுவரெலியா உட்பட நாட்டில் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் மேல் மாகாணத்தில் கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.