இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.
தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து விக்கட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
180 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது. குறித்த வெற்றியுடன் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலை வகிக்கின்றது.