பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகிறார்.
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச மருத்து அதிகாரிகளுடன் செந்தில் தொண்டமான் நீண்டகாலமாக கலந்துரையாடல்களை நடத்தி வந்ததுடன், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐந்து தோட்டங்களில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை பூர்த்திசெய்ய அரச மருத்துவ அதிகாரிகள் இணக்கம் வெளிட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் சாரணியா, ஒக்டன், மாஹதேவ, மெடிக்கத்தன, ரோபரி ஆகிய தோட்டங்களுக்கு புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் 8அம் திகதிக்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படுமென மருத்துவ அதிகாரிகள் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளனர்.
சாரணியா, ஒப்டன், மாதேவ, மெடிக்கத்தன, ரோபரி உள்ளிட்ட தோட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக வைத்தியரின்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். புதிய வைத்தியர்களின் நியமனத்துடன், இவர்கள் வெளி இடங்களுக்கு செல்லாது தமது மருத்துத் தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ள முடியும்.
கடந்த காலத்தில் பல தேர்தல் மேடைகளில் இத்தோட்டங்களுக்கு வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கௌ பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்த போதிலும் எவராலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது போனது. என்றாலும், செந்தில் தொண்டமான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.










