“ராஜபக்சக்கள் அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மஹிந்த ராஜபக்சவின் கொள்கைகள் என்றும் வாழும். ஆதனை சாகடிக்க முடியாது.” – என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ராஜபக்சக்களின் அரசியல் முடிந்துவிட்டதா, இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 1977 தேர்தலிலும் நாம் தோற்றோம். பெலியத்த தொகுதியில் களமிங்கிய மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறவில்லை. அக்காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் ராஜபக்ச எவரும் இருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருக்கின்றாரா, இல்லையா என்பது அல்ல, அவரின் கொள்கைகள் இருக்குமா என்பதே முக்கியம். முஹிந்த ராஜபக்ச என்ற நாமம் என்றும் இருக்கும். அதேபோல் மஹிந்த சிந்தனை உள்ளிட்ட அவரின் கொள்கைகளை அழிக்கவே முடியாது.
பண்டாரநாயக்கவின் கொள்கையை மையப்படுத்தியதாக சுதந்திரக்கட்சி இன்று இருப்பதுபோல, மொட்டு கட்சி மஹிந்தவின் கொள்கையை அடிப்படையாகக்கொண்டமாக அமையும்.
அதேவேளை, ஒற்றையாட்சிக்குள் இந்நாட்டை கட்டியெழுப்புவோம். புதியவர்கள் ஊடாக அரசியல் பயணம் தொடரும்.” -என்றார்.










