மாண்புமிகு வேண்டாம்: தோழர் என்பது போதும்!

தன்னை அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு ஜனாதிபதி என்றெல்லாம் விளிப்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பதவிநிலை கருதி ஜனாதிபதியென அழைத்தால் போதும் என அதிகாரிகளிடம்கூட ஜனாதிபதி கூறியுள்ளார் என தெரியவருகின்றது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி செயற்பட்டாளர்கள், ஜனாதிபதி தோழர் என்றே அநுரகுமார திஸாநாயக்கவை அழைக்கின்றனர் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை ஜனாதிபதிக்குரிய சலுகைகளை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு ஜனாதிபதி தவிர்த்துவருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles