யாழில் வேட்பாளர் ஒருவர் அகால மரணம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவருமான இனியவன் என அழைக்கப்படும் செந்திவேல் தமிழினியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி வேட்பாளரின் மறைவுக்கு முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலைத்  தெரிவித்துள்ளார்.

அதில், “எனது உடுப்பிட்டி தொகுதி இணைப்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எனது அன்புச் சகோதரன் செந்திவேல் தமிழினியனின் (இனியவன்) மறைவுச் செய்தியை கலங்கிய மனதுடன் அறியத் தருகின்றேன்.

அன்னாரின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்தத் துயரத் தருணத்தில் நாம் அனைவரும் அன்னாரின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரோடும் துணை நிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.” – என்று அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles