‘பொதுத்தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்.” – என்று சிலிண்டர் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘எமது கூட்டணியில் ரணில் விக்கிரமசிங்க, தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபாலடி சில்வா போன்ற சிரேஷ்ட தலைவர்கள் உள்ளனர். அவர்கள் கூட்டணியை வெற்றிகரமாக வழிநடத்துவார்கள். சிறந்த மாவட்ட தலைவர்களும் உள்ளனர்.
எனவே, பொதுத்தேர்தலில் ஊடாக ஆட்சியமைக்க முயற்சித்துவருகின்றோம். அதற்குரிய ஆணை கிடைக்காவிட்டால் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவோம். அதற்குரிய ஆணையை மக்கள் எமக்கே வழங்குவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் நான்கு தடவைகள் விருப்பு வாக்கு பட்டியலில் நானே முதலிடம் பிடித்தேன். 2015 இல்கூட மைத்திரியால் அநுராதபுரம் மாவட்டத்தை வெல்ல முடியாமல்போனது. இம்முறையும் நாமே வெல்வோம்.” – என்றார்.










