நாடாளுமன்ற தேர்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் சரியா?

நாடாளுமன்ற தேர்தலுக்கென ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதி தேர்தல் சட்டத்திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு முரணானதாக அமையவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானியில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி என்பன அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்தவகையில் தேர்தல் திகதியாக நவம்பர் 14 ஆம் திகதியும், புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான நாளாக நவம்பர் 21 ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் திகதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்துக்கும் வாக்களிப்பு நடைபெற வேண்டிய தினத்துக்கும் இடையில் உள்ள காலம்பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலக் கணக்குக்கு ஒரு நாள் முன்னதாக இப்போது பொது தேர்தல் திகதியிடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலேயே மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான பரிசீலனை இன்று (4) உயர்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் தரப்பில் இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள விளக்க கடிதத்திலேயே தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட திகதி சரியெனவும், அதில் தவறில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles