நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மண் மேட்டில் மோதுண்டதையடுத்து, வீதியோரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
