நாட்டில் ஏழு மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 4,410 குடும்பங்களைச் சேர்ந்த 16,287பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் 7,025 பேரும், மன்னார் மாவட்டத்தில் 8,011 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 48 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
1,136 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.










