உயிரிழந்தவர்களை நினைவுகூர புலிக்கொடி எதற்கு?

” போருக்கு பிறகு இம்முறையே மாவீரர் வாரம் பெருமெடுப்பில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை சாதாரண விடயமாக கருதமுடியாது. உறவுகளை நினைவுகூருவதற்கு புலிக்கொடி, கார்த்திகை பூ எல்லாம் எதற்கு?” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இனவாதம், அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் பிரிவினைவாதம் பற்றி அவர் ஏன் கதைக்கவில்லை?
வடக்கில் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 போருக்கு பிறகு இம்முறையே பெருமெடுப்பில் நிகழ்வு நடத்தப்படுகின்றது. எல்லா வீதிகளிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.  ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில்கூட இப்படி நடக்கவில்லை.
நினைவு தூபி அமைத்து, கார்த்திகை பூ வைத்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அணிவகுந்துவந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். நினைவேந்தல் நிகழ்வுகளில் சிறார்கள் பங்கேற்கின்றனர்.
புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். ஆனால் கொடியை காட்சிப்படுத்தி அனுஷ்டிக்கின்றனர். உயிரிழந்த உறவுகளை நினைவுகூருகின்றோம் என சிலர் கூறலாம். அவர்களை நினைவுகூர புலிக்கொடி எதற்கு? கார்த்திகை பூ எதற்கு? புலிகள் இருக்கும் படம் எதற்கு? உயிரிழந்த உறவுகளை இப்படி அஞ்சலிப்பதில்லை.
சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுமாம். அப்படியானால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்களை பயன்படுத்தி எவ்வாறு நினைவேந்தல் நடத்த அனுமதிக்க முடியும்.” – என்றார்.

Related Articles

Latest Articles