பதுளையில் 1,861 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பதுளை மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. ஐவர் காயமடைந்துள்ளனர்.

247 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. வியாபார நிலையமொன்றும் சேதமடைந்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் 113 குடும்பங்களைச் சேர்ந்த 411 பேர் 7 இடைத்தங்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles