உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழி தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும் அவர் கூறினார்.

” நாட்டில் முக்கிய சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தேவைப்படுகின்றது. எனவே, அடுத்த ஆண்டு அந்த முறைமை நீக்கப்படமாட்டாது. ஆனால் நிச்சயம் மாற்றப்படும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.” – எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles