இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன அவசரமாக கூடவுள்ளன.
டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் குறித்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
		
                                    









