தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் உறுதியாகியுள்ளது.
மனோ கணேசன் மற்றும் எராக் விக்கிரமரத்ன ஆகியோருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது.
எஞ்சிய இரு தேசியப் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.










