தனி வீடா? மாடி வீட்டு திட்டமா? அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?

“மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில் தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார். அரசாங்கத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பது மக்களை குழப்பமடைய செய்திருக்கின்றது.”

இவ்வாறு இலங்கை தொழிலாக காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கிராமமாக மாற்றுவது தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கின்றன.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி பங்களிப்புடனும் ஆயிரக்கணக்கான தனி வீடுகள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. இந்த வீடுகளுக்கான காணி உறுதி பத்திரங்களை வழங்குவதற்கு கடந்த அரசாங்க காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தயாரித்து முடிவுறுத்தப்பட்ட கனிகளுக்கான உறுதி பத்திரங்களை பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் வழங்கி வைத்திருக்கிறார்.
தற்போதைய அரசாங்க காலத்திலும் நாம் முன்னெடுத்த காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

200 வருடங்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்த தொழிலாளர் சமூகத்துக்கு வீடு அமைப்பதற்கு காணி வழங்குவதற்கு அரசாங்கம் தற்போது பின்னடிப்பதாக தெரிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்பதற்கு காணித் துண்டுகள் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் அதற்கு முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பொதுவான கருத்து நிலைபாடு இல்லை. அவ்வாறெனில் பிரதி அமைச்சருக்கு தெரியாமல் அரசாங்கம் செயலாளர் மட்டத்தில் தீர்மானங்களை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஏற்கனவே தோட்டங்களில் மாடி வீடு திட்டங்களை அமைக்கப்படுத்துவதை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அதை மீண்டும் திணிப்பதற்கு முற்படக்கூடாது. ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதியின் படி தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக தேயிலை பயிரிடப்படாமல் கைவிட்ட காணிகள் ஏராளமாக இருக்கின்றன என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles