மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான வடமுனை – ஊத்துச்சேனையில் குடும்பத் தகராறில் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமுனை – ஊத்துச்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் (வயது 48) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரே இந்தக் கொலையைப் புரிந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாழைச்சேனை பொலிஸார், கொலையாளியையும், அவரின் மனைவியையும் கைது செய்துள்ளனர்.
