“ எனக்கு வழங்கப்பட்டது கௌரவ கலாநிதி பட்டமாகும். தற்போது அனைவருக்கும் பணத்துக்கு பட்டம் வழங்கப்படுவதால் எனக்கு வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை ஆற்றில் வீசிவிடடேன்.” – என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“போலி கல்வித் தகைமைகளைக் காண்பித்து நாடாளுமன்றம் தெரிவான அனைவரையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி நீக்க வேண்டும். அப்போது அவரது பெயர் வரலாற்றில் இடம்பெறும். அதுமட்டுமல்ல லீ குவான் மறுபடியும் பிறந்துவிட்டார் என மக்கள் கொண்டாடுவார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் மக்களின் செல்வாக்கை அநுர இழக்க நேரிடும்.
எனக்கு கௌரவ கலாநிதி பட்டமே வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்ல தேசமான்ய, தேசபந்து உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டன. ஆனால் கலாநிதி பட்டம் காசுக்கு வழங்கப்படுவதாக விமர்சனம் எழுந்த பின்னர் அத்தனை பட்டங்களையும் ஆற்றில் வீசிவிட்டேன். தற்போது கரப்பான் பூச்சீ, பள்ளி என்பவற்றுக்கு மட்டும்தான் பட்டம் வழங்கப்படாமல் உள்ளது.” – என்றார்.










