பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!

“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.”

இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு ,

“ எமது பிரதி அமைச்சரின் இரத்தினபுரி கஹாவத்தை மற்றும் உடபுசல்லாவை ஆகிய பகுதிகளிலும் சம்பவங்கள் இடம்பெற்றன. இவை தொடர்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பிரதீப் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

தோட்ட நிர்வாகத்தினர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

 

Related Articles

Latest Articles