யாழிலிருந்து வந்து கலஹாவில் கொள்ளையடித்த திருட்டு கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நாட்டில் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் நகையகங்களை உடைத்து கோடி கணக்கான பணம், தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களை களவாடிவந்த இளைஞர்கள் குழுவை, கம்பளை, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, கலஹா மற்றும் நுவரெலியா, கந்தபொல ஆகிய பகுதிகளில் இக்குழுவினர் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

நகையகங்கள், கோவில்கள் மற்றும் தொலைபேசி நிலையங்களே கொள்ளை கும்பலின் பிரதான இலக்காக இருந்துள்ளது. கலஹா பகுதியிலும் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ். நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் இக்குழுவினருக்கு 9 பிடியாணை உத்தரவுகள் உள்ளன என்று கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 வருடங்களாக நாட்டில் பல பகுதிகளில் வாடகைக்கு வீடுகளை எடுத்து வாழ்ந்து கொள்ளையடித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

19,21, 21, 23 மற்றும் 26 வயதுகளுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles