ஜனாதிபதி நிதியத்தில் நிதி உதவி பெற்ற மேலும் பல அரசியல்வாதிகள்: பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும்!

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவிபெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பெயர்,விவரங்களும் வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரை நிதிகளை பெற்ற ஒரு சில அரசியல்வாதிகளின் பெயர்களைதான் நான் வெளியிட்டிருந்தேன். மற்றுமொரு பெயர் பட்டியலும் கைவசம் உள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி உதவி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் விவரங்களும் உள்ளன. அந்த விவரங்களும் வெளியிடப்படும்.

ஜனாதிபதி செலயகத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் 2005 இற்கு முன்னரான காலப்பகுதியையும் வெளியிட எதிர்பார்க்கின்றோம். சிஐடியில் மட்டுமல்ல ஜனாதிபதி செயலகத்திலும் அவ்வளவு எளிதில் ஆவணங்களை தேட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles