காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ், பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த, பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையொன்றே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெறுபவதற்காக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக டிசம்பர் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கு நாள்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது-34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles