மயைகத்தின் இரண்டு சாதனை பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் நுவரெலயிh ஆவெலிய ஸ்ரீ முத்துமாரிம்யமன் சீதாஎலிய சீதையம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற மாஸ்டர் செப் (சமையற்கலை போட்டியில்) போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஹட்டன் நகரை பிறப்பிடமாக கொண்டவரும் ஹட்டன் ஹலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவருமான நர்மதா பாலசுப்பிரமணியம் மற்றும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற அழகுக் கலை நிகழ்வில் கலந்து கொண்ட நுவரெலியாவை சேர்ந்த பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான எம்.இந்திராணி என்ற பெண் 30 நிமிடத்தில் அழகுக்கலையில் சாதனை செய்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த சாதணைகளை செய்த இரண்டு பெண்களும் நுவரெலியா ஆவெலிய ஸ்ரீ முத்துமாரிம்யமன் சீதாஎலிய சீதையம்மன் ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்களால் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகிழ்வில் ஆலயத்தின் செயலாளர் லிங்கராஜ் ஆயுள் காப்பாளர்கள் காப்பாளர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
நுவரெலியா நிருபர்










