ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பலமடைய வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.