ரணில், சஜித் சங்கமம்: விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

கட்சியின் கிராமிய அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியும் தமது கட்சியும் இணைய வேண்டும் என்பதற்குரிய சமிக்ஞையை ஐக்கிய தேசியக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கும் அக்கட்சி தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி சஜித் தரப்பும் ஆராயவுள்ளது.

ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முக்கிய பணி கட்சி செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles