தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தனது 4 வயது மகனுடன் தாயொருவர் இன்று மாலை பாய்ந்துள்ளார்.
குறித்த தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் லிந்துலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண், தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தலவாக்கலை, மஸ்கெலியா நிருபர்கள்