புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயப்பனை மேல் பிரிவு தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலையில் சிறுத்தை உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் கம்பளை வனஜீவராசி அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அங்கு விரைந்த அதிகாரிகள், சடலத்தை எடுத்துச்சென்றுள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.