கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று (18) மாலை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நானுஓயா – எடிம்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த ஆட்டோ, கண்டி -நுவரெலியா வீதியின் லபுக்கலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில், பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மூவரையும், அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்றி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்தனர். விபத்து தொடர்பான விசாரணையை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாரு காரணமாக விபத்து சம்பவித்ததாக சம்பவத்தில் காயமடைந்த சாரதி தெரிவித்தார்.










