தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நேற்று அட்டன் DKW மினி மண்டபத்தில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் இந்தக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எதிர்கால அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளித்து உரையாற்றினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன், பிரதி பொதுச் செயலாளர் கல்யாணகுமார், உப தலைவர் ராஜமாணிக்கம், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான முத்தையா ராம், சர்வதேச இணைப்பாளர் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் உதவிச் செயலாளர்களான வீரப்பன், ரத்னம் சிவகுமார், பாலசுந்தரம், உதவி நிதிச் செயலாளர் சிவானந்தன், உபதலைவர் கணேசன், தொழில் உறவு இயக்குநர் சந்திரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் முன்னணியின் முக்கியஸ்தர்கள் ,அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், பணிமனையின் முழு நேர உத்தியோஸ்தர்கள், தோட்டக்கமிட்டி தலைவர்கள் உட்பட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் நிலைவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.










