மன்னார் துப்பாக்கிச்சூடு: 3 சந்தேகநபர்களும் இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் என மூன்று சந்தேகநபர்களுக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிவான் முன்னிலையில் வழங்க முன்வந்துள்ளனர்.

அதனால் சந்தேகநபர்கள் மூவரையும் இன்று செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாகவுள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

2022ஆம் ஆண்டு உயிலங்குளம் – நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்படப் பலர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணைக்கு முன்னிலையாக நீதிமன்றுக்கு வருகை தந்தபோதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி்ச்சூடு நடத்திவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரழந்தனர். பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. பேசாலையில் வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் உட்பட இருவர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அடம்பனில் வைத்து இருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர். அந்தக் கொலையும் நீதிமன்றுக்கு முன்பான கொலையும் சகோதரர்களின் கொலைக்குப் பழிதீர்க்கும் சம்பவங்கள் எனக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் மன்னார் நீதிவான் மன்றில் நேற்றுமுன்தினம் மாலை முற்படுத்தப்பட்டனர். பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிவான், நேற்று வரை மூவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.

இந்த நிலையில் மூவரும் நேற்று மாலை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நீதிவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்க மன்றிடம் வேண்டுதல் வைத்தனர்.

அதனால் பொலிஸ் தடுப்புக் கட்டளையை நீடிக்காது சந்தேகநபர்கள் மூவரையும் இன்று வரை விளக்கமறியலில் முன்வைக்க உத்தரவிட்ட நீதிவான், இன்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவதற்கு அனுமதியளித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles