மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையிலிருந்து வெளியேறினால் அவருக்கு 10 வீடுகளைக்கூட வாங்கிக்கொடுப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தூய்மை ஸ்ரீலங்கா தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டை எடுக்கட்டும். அதனை 44 லட்சம் ரூபாவுக்கு வாடகைக்கு வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதாக இருந்தால் கொண்டை கட்டி சீனர்களுக்குதான் அதனை வழங்க முடியும். விஜேராம பகுதியில் 44 லட்சத்துக்கு எவரும் வீட்டை வாடகைக்கு எடுக்கமாட்டார்கள்.
மஹிந்தவின் வீட்டை எடுத்தால் அவருக்கு 10 வீடுகளை வாங்கிக்கொடுப்பதற்கு மக்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு நீக்கப்பட்டால் தியாகத்தின் அடிப்படையில் மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கவும் மக்கள் வருவார்கள்.
மஹிந்தவுக்கு 80 வயதாகிவிட்டது. எனவே, ஜனாதிபதி அநுர, மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து, அவரின் மகன் நாமலுடன் மோதுங்கள்.” – என்றார்.
