புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கிளிநொச்சியில் கைது!

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles