உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களை தாக்கிய பொது முகாமையாளர்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் இன்று (27.01.2025) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிற்சாலைக்கு முன்னால் திரண்ட தோட்ட சேவையாளர்கள், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும், பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்கள்.

எனவே, க்ளீன் ஸ்ரீலங்கா போன்ற வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க வேண்டுமானால் பக்கச்சார்பாக செயல்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதியே மேற்படி தாக்குதல் நடந்துள்ளது. பொது முகாமையாளரும், உதவி முகாமையாளரும் இணைந்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவரும் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ். இளையராஜா தெரிவித்துள்ளார்.

நான்கு நாள்கள் கடந்தும், இது தொடர்பில் பொலிஸார் மந்த கதியிலேயே செயல்பட்டுள்ளனர் எனவும், இன்றைய தினமே சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். பொதுமுகாமையாளர் தலைமறைவாகி இருப்பதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்; குறிப்பிட்டுள்ளார்.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles