6400 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று (08) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
42 ,40, வயதுடைய கொவிஜன சேவா நிலையத்துக்கு பின் புறமாக வசிக்கும் நபர் ஒருவரும் பூஜா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் இருவருமாக மூவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒவ்வொருவரிடமும் 3500 மில்லி கிராம், 1400 மில்லி கிராம், 1500 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடம் இருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா