சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடகப் பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, சுகவீனம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.