தேவையேற்படின் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தது கவனிக்கத்தகக்து.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் ட்ரம்ப் தனிதனியாக தொலைப்பேசியில் உரையாடல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.