பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், காசாவில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அதிகாரிகள் குழு நேற்று அமெரிக்க தூதருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்கா இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.