இளம் குடும்பப் பெண் வன்புணர்வு: 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வவுனியாவில் 31 வயது இளம் குடும்பப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப் படும் 37 வயது குடும்பஸ்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுபொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்பப் பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயலில் வசிக்கும்குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர்தனது வீட்டுக்கு அழைத்து மேற்படிபெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிர யோகம் செய்துள்ளார்.

இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி மேற்படி பெண்ணை மீண்டும் பல தடவைகள் அழைத்து அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான மேற்படி பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூவரசங் குளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலை மறைவாகியிருந்தார்.

இந்நிலையில்,வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்தநிலையில் 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles