பூகுடு கண்ணாவின் சகோதரர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ‘பூகுடு கண்ணா’ என அழைக்கப்படும் புஷ்பராஜாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles