வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு முக்கோண வலயம்!

வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது எனவும், 10 லட்சத்து 24 ஆயிரம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

‘ வடக்கில் 16 ஆயிரம் ஏக்கரில் தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்படும். இப்பணிக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னங்கன்று இலவசமாக வழங்கப்படும. 10 லட்சத்து 24 ஆயிரம் தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.

உரமும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக 819 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles