உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட 110 வேட்பு மனுக்களில் 87 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனஎன்று மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் 121 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்கான உறுதிமொழிகளை வைப்பிலிட்டனர்.
இதில் அரசியல் கட்சிகளால் 97 வேட்பு மனுக்களும், சுயேச்சைக் குழுக்களால் 13 வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், சுயேச்சைக் குழுக்களின் 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
