அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் நெருக்கடியில் இருந்து மீள அரசுக்கு முழு ஆதரவு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பக்கமே நிற்பதாகவும், குறுகிய அரசியல் நோக்கில் செயற்பட தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க 44 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் பாரிய பொருளாதார பிரச்சினையில் நுழைவாயிலில் நாம் இருக்கின்றோம்.

கொரோனா நெருக்கடியின்போதும் இப்படியான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவ்வேளையில் ஜே.வி.பி. உள்ளிட்ட எதிரணிகள், நாட்டை மூடுமாறு வலியுறுத்தின.

தொழிற்சாலைகளை மூடுமாறு கூறின. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதை நிறுத்துமாறு வலியுறுத்தின. அந்நிய செலாவணியை அனுப்ப வேண்டாம் என பணியாளர்களுக்கு கூறப்பட்டது.
அதாவது நெருக்கடியில் இருந்து நாடு மீண்டழெ உதவுவதற்கு பதிலாக, நாட்டை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டு, நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்கின.

எனினும், நாட்டை நேசிக்கும் கட்சி என்ற வகையில் நாம் அவ்வாறு செயற்படபோவதில்லை. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles