உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
அத்துடன், மோசடிகாரர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் நுவரெலியா மாவட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
ஹட்டனில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தில் சில அரசியல் வாதிகள், மக்கள் மத்தியில் இனவாதம் பேசி வாக்கு வேட்டை நடத்துவதற்கு முற்படுகின்றனர். இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு எமது ஆட்சியில் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஏமாற்று அரசியல் வாதிகள் என்னதான் கூறினாலும், நுவரெலியா மாவட்ட மக்கள் அனைத்து மாற்று கட்சிகளையும் கடந்தமுறைபோலவே புறந்தள்ளி விட்டு தேசிய மக்கள் சக்தி பக்கம் திரள்வதற்கு தயாராகவே உள்ளனர். ” – என்றார்.
