“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வு குறித்து போலி அழைப்பிதழ்!

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில்

“சிறி தலதா வழிபாடு “ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வுக்கு இந்த வகையான சிறப்பு அழைப்பிதழ் யாருக்கும் வழங்கப்படவில்லை.

மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் சிறி தலதா வழிபாட்டுக்காக சிறப்பு (VIP) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதுடன், அதில் எந்த உண்மையும் இல்லை.

Related Articles

Latest Articles