பிள்ளையானை தண்டித்து புலிகளை திருப்திப்படுத்த முயற்சியாம்!

” கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையானை தண்டித்து, புலிகளை திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் அமைப்பில் இருந்து 6 ஆயிரம் பேருடன் வெளியேறி படையினருக்கு பிள்ளையான் ஒத்துழைப்பு வழங்கி இருக்காவிட்டால், சிலவேளை போரை முடிவுக்கு கொண்டுவரமுடியாமல்கூட போய் இருக்கலாம்.

எனவே, அப்படியான நபர்களுக்கு நாம் நன்றிகடன் செலுத்த வேண்டும்.  தவறுகளுக்கு தண்டனை வழங்குவதாக இருந்தால் அனைவருக்கும் அது வழங்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆதரவு வழங்கியவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கும்போது புலிகளை எதிர்த்து போராடியவர் மட்டும் ஏன் கைது செய்யப்படுகின்றார்?

ஜே.வி.பியினரும் முன்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர். அப்படியானால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே பிள்ளையானை அரசாங்கம் தண்டிக்க முற்படுகின்றது. புலிகளுக்கு எதிராக போராடியவர், இன்று புலிகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்.  எது எப்படி இருந்தாலும் புலிகளை திருப்திப்படுத்துவதற்காக, பிள்ளையானை தண்டிப்பதற்கு இந்த அரசாங்கத்தக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles